Header Ads

test

முன்னாள் போராளி ஒருவருக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட புதிய வீடு.

 தலைக்கு நிழல் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் போராளியான யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த ராசவல்லன் தபோரூபன் என்பவருக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு நேற்று (11) யாழ். பாதுகப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களினால் கையளிக்கப்பட்டது.

515 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேர்னல் அருண விஜேகோனின் மேற்பார்வையின் கீழ் 10 ஆவது இலங்கை இராணுவ எறிகணைப் படையணியினரின் மனித வள ஒத்துழைப்பில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த இல்லத்தினை அமைப்பதற்கான பூரணநிதி பங்களிப்பினை திரு விஷ் நடராஜா என்பவர் வழங்கியிருந்தார்.

மயிலிட்டியில் இடம் பெற்ற குறித்த வீடு கையலிக்கும் நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்திலிருந்து இராணுவத் தளபதி ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டதுடன் ராசவல்லன் தபோரூபனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணத்திலிருந்து யாழ். பாதுகப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, நன்கொடையாளரான திரு விஷ் நடராஜா, அவரது மனைவி திருமதி நடராஜா மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள், பயனாளிகளின் உறவினர்கள் என பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னாள் போராளியான ராசவல்லன் தபோரூபன் 2021 ஜூன் 24ம் திகதி ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த நபரது குடும்பத்திற்கு சரியான தங்குமிடம் இருக்கவில்லை,இது குறித்து இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து 2021 நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேட்கொண்ட போது புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments