Header Ads

test

குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

மீட்பு திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது நேற்று (26) பகல் இடம்பெற்றுள்ளது.

இப் பகுதியில் வேளாண்மை பயிர் செய்கைக்கு சென்ற விவசாயிகள் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 



No comments