Header Ads

test

இரவிவோடு இரவாக குருந்தூர் மலைக்கு விஜயம் செய்த முக்கிய அமைச்சர்கள்.

 முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமண ஆகியோர் 40க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் நேற்று இரவு குருந்தூர் மலை, குமுளமுனை அணைக்கட்டுக்கு விஜயம் செய்தனர்.

இதேவேளை, ஹெப்பாட்டிகொல்லாவ, புல்மோட்டை அரிசிமலை மற்றும் மணலாறு பிரதேசங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் அமைச்சர்களுடன் இணைந்து தொல்பொருள் பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட விகாரையை வழிபட்டனர்.

முல்லைத்தீவில் 617 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட கடற்படை முகாமில் இரவைக் கழித்த இரண்டு அமைச்சர்களும் இன்று காலை வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments