Header Ads

test

கிளிநொச்சியில் திடீரென அதிகரித்துள்ள கொவிட் தொற்று.

 கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் தாங்கள் பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுவதோடு, 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அவர்களுடன் இரண்டு கர்ப்பிணித் தாய்மாரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

 எனவே தற்போது தொற்று பரவும் வேகம் அதிகமாக காணப்படுகின்றமையால் பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து செயற்பட வேண்டும் என்றும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதுள்ளவர்கள் அவற்றை தவறாது செலுத்திக்கொள்ளுமாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments