Header Ads

test

வெற்றியை தமதாக்கிக்கொண்ட முல்லை இராவணன் அணியினர்.

தமிழ்க்குடில் ஒன்றியத்தின் உயர் சிந்தனையின் பால் உருவாக்கம்பெற்ற முல்லைத்தீவு இராவணன் அணியினர் மென்பந்து துடுப்பாட்டத்தில் வெற்றியை தமதாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் தெரிய வருவது,

05.11.2021 அன்று கள்ளப்பாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து சுற்றுப் போட்டியில் சிலாவத்தை, வண்ணாங்குளம்,மற்றும்  கள்ளப்பாடு ஆகிய மூன்று அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து துடுப்பெடுத்தாடினர்.

 குறித்த சுற்றுப் போட்டியில் சிலாவத்தை அணியினர் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.இச் சுற்றுப் போட்டியில் இராவணன் அணி தோல்வியை எதிர்கொண்டனர்

மேலும்,14.01.2022 அன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் கள்ளப்பாடு, சிலாவத்தை, வண்ணாங்குளம் மற்றும் தீர்த்தக்கரை அணியினர் குறித்த சுற்று தொடரில் பங்குபற்றியதுடன்,சிலாவத்தை அணியினர் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றதுடன் வண்ணாங்குளம் அணி இரண்டாவது இடத்தை பெற்றதுடன் மீண்டும்  தமிழ்க்குடிலின்  இராவணன் அணியினர் தோல்வியை எதிர்கொண்டனர்.

இரண்டாவது முறையாகவும் தோல்வியை சந்தித்த  இராவணன் அணியினர் மூன்றாவது தடவை வெற்றியை தமதாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கமைவாக சிலாவத்தை அணியினருடன் 17.01.2022 அன்று இடம்பெற்ற போட்டியில் இராவணன் அணியினர் தாம் ஏற்கனவே இழந்த வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

குறித்த வெற்றிக் கேடயத்தை சமூக ஆலோசகரும் கள்ளப்பாடு ஆங்கில ஆசிரியருமான கன்யூட் கலையரசி அவர்கள் வழங்கியதுடன் விளையாட்டுப் போட்டியின் நடுவராக திரு மிராஜ் அவர்கள்  பணியை சிறப்பாக முன்னெடுத்திருந்தார்.

குறித்த சுற்றுத் தொடருக்கான நிதி உதவியை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த றெல்வன் வழங்கியதுடன், தமிழ்க்குடில் ஒன்றியத்தின் விளையாட்டுத் துறையின் தலைவரான தினேஷ் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாகவே  இப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றன.

அத்துடன் இவ் மென்பந்து சுற்றுத்தொடரில் இராவணன் அணின் விளையாட்டு வீரர்கள்

அனுசாந் (அணித் தலைவர்) டினுசாந்‌!கிருசாந்,சுயீபன்,சாருயன்,யதுசன்,நவீன,விஜய்,நிதுசன்,தருண்,அப்லல்,வஜீவன் ஆகியோர் களமிறங்கியிருந்மை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க்குடிலின் இராவணன் அணியினர் பல்வேறு பட்ட சமூக சேவைகளையும் ஆற்றிவருவதுடன் மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றுவருகின்றனர்.






No comments