தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் திணைக்களத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவை வழங்குவது நீதியற்ற செயற்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதில் தலையீடு செய்யுமாறு தேசிய ஊழியர் சங்கத்தின் சுரங்க நாவுலகே கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment