Header Ads

test

வீதியில் துப்பினால் இனிவரும் நாட்களில் தண்டனைக்குரிய குற்றம்.

 குற்றவியல் தண்டனை சட்டத்திற்கு அமைய வீதிகளில் துப்பினால் அந்நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ச (Roshan Rajapaksa) தெரிவித்துள்ளார்.

வீதிகளில் ஆங்காங்கே வெற்றிலையை சாப்பி எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு மற்றும் அரசதலைவர் செயலகத்தின் விசேட பொறுப்புகள், சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ச, காவல்துறை சுற்றாடல் பிரிவுக்கு இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

வீதிகளில் ஆங்காங்கே எச்சில் துப்புவதால், கடும் அசுத்தம் ஏற்படுவதுடன் கொரோனா போன்ற வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 


No comments