Header Ads

test

குழந்தைகள் காப்பாகம் ஒன்றில் பலரை பீடித்துள்ள கொவிட் தொற்று.

 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட  அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்டாரவெல சுஜாதா செவன குழந்தைகள் காப்பகத்திலேயே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குறித்த அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 11 குழந்தைகளுக்கும் 6 பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள், உணவகத்தில் பணி புரியும் இருவர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளிட்ட தரப்பினரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


No comments