Header Ads

test

யாழில் புலிகளுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த பொலிஸார்.

  யாழில் புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் விரட்டியடிக்கப்பட்டதால்  பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் தமிழர் பகுதிகளில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் யாழ் நகரில் சமூகநீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தேசிய கொடியை ஏந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், தற்போதுள்ள நிலையில் போராட்டங்கள் நடத்த முடியாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதோடு அவர்களை கைது செய்யும் நிலை வரலாம் என பொலிஸார் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. 




No comments