இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் லண்டனில் தீயில் கருகி பலி.
பிரித்தானியா தலைநகரான லண்டனில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (18) இரவு லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தாயும், மகளும் மற்றும் மகளின் கை குழந்தை, 5 வயது சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தற்போது, அயலவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று பலர் பூ கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Post a Comment