Header Ads

test

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் பேராபத்தைச் சந்தித்துள்ள பொது மக்கள்.

வவுனியாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவோடிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வரும்நிலையில்  குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியும் வருகின்றது.

இந்நிலையில் வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது.

இதேவேளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகர சபையின் தீயணைப்பு பிரிவு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து குளக்கட்டில் மண் பைகளை இட்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

நொச்சிக்குளம் உடைப்பெடுத்தால் அதன் கீழ் உள்ள 98 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைவதுடன், பல வீடுகள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்படும் இந்நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கை இரவோடிரவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


 

No comments