Header Ads

test

யாழில் பொது மக்கள் காணிகளை சுவீகரிக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய தமிழ் பிரதிநிதிகள்.

 1990 ஆம் ஆண்டு முதல் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உள்ளடக்கியதாக, கடற்படை முகாம் அமைந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் 3 தனியாருக்கு சொந்தமான, 2 ஏக்கர் காணிகள் இன்று அளவீடு செய்யப்பட்டது.

எம்.கே.சிவாஜிலிங்கம், ச.சஜீவன். வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று, இராணுவ முகாமிற்குள் நிலஅளவைத் திணைக்களத்தினர் நுழையவிடாமல் தடுத்தனர்.

எனினும்  பிரதேச செயலாளர், இராணுவம் கலந்துரையாடி, நிலஅளவைத் திணைக்களத்தினரை வேறு பாதையினால் அழைத்து செல்ல ஏற்பாடு நடைபெறுகிறது என அங்கிருந்த மக்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து, நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தை முன் பக்கமாகவோ, பின் பக்கமாகவோ செலுத்த முடியாதவாறு தடையேற்படுத்தினர்.

இதையடுத்து, தமது காணிகளை ஒப்படைக்க சமமதம் இல்லையென காணி உரிமையாளர்கள் கையொப்பமிட்ட கடிதங்களை பெற்றுக்கொண்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.






No comments