Header Ads

test

யாழில் 6 வயது சிறுமி கடத்தி துன்புறுத்தல்.

 யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் 6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய குற்றச்சாட்டில் 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வருகின்ற நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் சிறுமி நேற்று அயல் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பி வரும் வேளையில் பக்கத்து வீட்டு இளைஞன் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் கயிற்றினால் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார்.

அதன்பின்னர் சிறுமியின் உறவினரிடம் " சிறுமியின் தந்தை வந்தால்தான் சிறுமியை விடுவிப்பேன்" என கூறினார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட கொடிகாமப் பொலிஸார், சிறுமியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

 சந்தேக நபரான  இளைஞனுக்கும் சிறுமியின் தந்தைக்கும் இடையில் நகைப் பிரச்சினை இருந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைதான இளைஞனை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


No comments