Header Ads

test

திருகோணமலை எண்ணெய் கிணறுகள் இந்தியாவிற்கு தாரைவார்க்கப்படுமா - நாமல் வெளியிட்ட பகீர்த்தகவல்.

 திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணற்றில் மேலும் ஒன்றை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 99 எண்ணெய் கிணறுகள் அங்குள்ள நிலையில் அவற்றில் ஒன்று மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் வசம் இருப்பதாகவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் இன்றைய தினம் திருகோணமலையிலுள்ள எண்ணெய் கிணறுகள் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், இவரின் விஜயம் தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பல அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களை மக்களிடம் கையளிக்கவே இவ்வாறு இலங்கை வருகின்றனர்.அது போன்ற பயணமே இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவின் விஜயமும்.

அதேப்போன்று ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களும் அரசியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை வருகின்றனர்.

மேலும்,திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறுகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றினை வழங்கியது கடந்த அரசாங்கமே தவிர நாம் அல்ல.

இந்த விடயத்திற்கான அமைச்சர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.அவர் இது தொடர்பில் மக்களிற்கு தெளிவுப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார். 



No comments