Header Ads

test

அறிமுகமாகிறது கொவிட் வைரஸை தடுப்பதற்கான புதிய மாத்திரை.

 அமெரிக்காவில் கோவிட் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்படு இறக்கக்கூடிய எண்ணிக்கை அரைவாசியாக குறைக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனமான மெர்க் அண்ட் கோ என்ற நிறுவனம் கண்டு பிடித்த புதிய வைரஸிற்க்கு எதிரான மருந்து, கோவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்போரின்  எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

கோவிட் வைரஸின் மரபணுவின் குறியீட்டில் பிழைகளை ஏற்படுத்தும் இந்த மோல்னுபிறவிர் என்ற மருந்து அரசின் அனுமதியை பெற்றால் இதுவே உலகில் முதல் முதலில் அனுமதிக்கப்பட்ட வாய் மூலம் எடுத்துக் கொள்ளப்படும் கோவிட் வைரஸிற்க்கான மருந்து என்ற பெயரை பெறும்.

இந்த மருத்துக்கான அனுமதியை விரைவாக பெறுவதற்கு தாம் செயற்பட்டு வருவதாக மெர்க் அண்ட் பார்ட்னர் ரிட்ஜ்பாக், தெரிவித்ததுடன் உலக அளவில் அனுமதியை பெற விண்ணப்பம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தற்பொழுது உள்ள கிளியார்ட் சயன்ஸ் நிறுவனத்தின் ரேம்டீசிவிர் மற்றும் ஸ்டெராய்டு டெக்சாமெத்தசோன் போன்ற மருந்துகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே பொதுவாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 


No comments