Header Ads

test

யாழ் மாவட்டத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்து.

 யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளருடன் இன்று(02) இடம்பெற்ற மெய்நிகர் வழியினூடான கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திட்டத்தின் ஊடாக 2 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில்சார் திட்டங்கள் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

 இத் திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழில்சார் குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக சுமார் 4 கோடியே 57 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பயனாளர்களாக யாழ். மாவட்டத்தில் உடுவில் தவிர்ந்த ஏனைய 14 பிரதேச செயலக பிரிவுகளில் 933 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்து கொண்டார்.


No comments