கொவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸ் விபத்து.
முல்லைத்தீவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரது சடலத்தை திருகோணமலையில் தகனத்துக்காக எடுத்துச் சென்ற அம்பியுலன்ஸ் வாகனம் நேற்று (15) மாலை விபத்துக்குள்ளானது.
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குறித்த வாகனம் வீதியின் நடுவே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் அம்பியுலன்ஸ் சாரதி காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு உயிரிழந்தவரின் சடலத்தை பிறிதொரு சாரதியுடன் தகனத்திற்கு அனுப்பிவைத்தனர்.

Post a Comment