Header Ads

test

இரு தடுப்பூசிகளையும் பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகர் கொவிட் தொற்றால் மரணம்.

 இரு தடுப்பூசிகளையும் பெற்ற காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதான வாத்துவ பொதுபிட்டியவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த உதவி பொலிஸ் பரிசோதகர் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஓகஸ்ட் 19 மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொவிட் பாதிக்கப்பட்டமை உறுதியானதையடுத்து பொலிஸ் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

அங்கிருந்து கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments