Header Ads

test

வட மாகாண ஆளுநர் எடுத்துள்ள அதிரடி முடிவு.

 இலங்கையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க பணிகள் இடம்பெற்றுவருவதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வருவதற்கான தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தென் மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகள் அடுத்த மாதம் (ஒக்டோபர்) 15 ஆம் திகதி ஆரம்பாகும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தது,

மாகாண ஆளுநர்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே வடக்கு மாகாணத்தில் மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரிடம் வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெளிமாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை பாதுகாப்பாக முன்னெடுக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.  


No comments