Header Ads

test

கொவிட் தொற்று காரணமாக மேலும் பலர் மரணம்.

 நாட்டில் நேற்று (01)  கொவிட் தொற்றால் 63 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 571 ஆக அதிகரித்துள்ளது.


No comments