Header Ads

test

இணையவழி கற்கை நெறியால் சிறுவனுக்கு ஏற்பட்ட வினை.

 அளவிற்கதிகமாக கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடிய 15 வயது மாணவன் ஒருவர், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23ஆம் திகதி மாத்தறை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 15வயதான மாணவனின் இணைய வழி கல்விக்காக பெற்றோர் கையடக்க தொலைபேசி வாங்கிக் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் அதில் கேம் விளையாட ஆரம்பித்த மாணவன், நாளடைவில் அதற்கு அடிமையாகி நாள் முழுவதும் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அத்துடன் அளவிற்கதிகமாக கேம் விளையாடிய அவர், இணைய வழி வகுப்புக்களில் பங்குபற்றுவதை தவிர்த்துக் கொண்டதுடன் அந்த நேரத்திலும் கேம் விளையாடியுள்ளார்.

இதனையடுத்து மாணவன் வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என ஆசிரியரால் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், மாணவன் கேம் விளையாடுவதிலேயே பொழுதை கழிப்பதை அறிந்த தாயார், கையடக்க தொலைபேசியை வாங்கி வைத்து விட்டார்.

இந்நிலையில் தாயார் தொலைபேசியை பறித்து வைத்ததனால் கேம் விளையாட முடியவில்லை என்ற விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.




No comments