Header Ads

test

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனை.

  நாட்டில் போலியாக தயார் செய்யப்பட்ட ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளுக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போலியான ஊரடங்கு அனுமதிகளுடன், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிலர் சில பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவடிகளிலும் ஏனைய இடங்களிலும் நபர்களை சோதனைக்குட்படுத்தும் போது அவர்களது அனுமதிப் பத்திரம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

போலியான ஊரடங்கு அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி செயற்படுமாறு அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட விதிகளை, போலியான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டு மீறியவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


No comments