Header Ads

test

சர்வதேச அளவில் தமிழருக்கு கிடைத்த மிகப்பெரும் பதவி.

  இன்டர்போலின் (The International Criminal Police Organization) தலைவராகவும், குற்ற புலனாய்வுத்துறையின் உதவி பணிப்பாளராகவும் பொலிஸ் அத்தியட்சகர் சரவணன் கன்னியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்வு மலேசியாவின் புக்கிட் அமானில் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் முன்னிலையில் பொலிஸ் அத்தியட்சகர் முகமட் பேரோஸ் இந்த நியமனத்தை வழங்கினார்.

இதேவேளை இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தின் தலைவர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் உதவிப் பணிப்பாளர் பதவி சவால் நிறைந்ததாக இருந்தாலும் சிறந்த முறையில் பணியாற்றுவதாக சரவணன் உறுதிபூண்டுள்ளார்.

மலேஷியாவின் சித்தியவான் ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியில் தமது தொடக்க கல்வியை தொடங்கிய சரவணன், யூ.பி.எம் எனப்படும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்னர் லண்டனில் தடயவியல் துறையில் முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டத்தை பெற்றுள்ளார்.


No comments