Header Ads

test

கொரோனாவை ஒழிக்க யாழிலிருந்து பாதயாத்திரை.

 யாழ்ப்பாணத்தில் வேலணை சரவணை செல்லக்கதிர்காமம் பொன்னி கோவிலிருந்து இலங்கையில் உள்ள சிவபூமிகளுக்கான பாதயாத்திரையினை கதிரன் சின்னப்பொடியன் கதிரவேல் சாமியார் தொடக்கியுள்ளார்.

நாட்டுமக்களுக்கு சாந்தியும் சமாதானமும் வேண்டியும் மனித நேயம் கொண்ட அனைத்து மக்களும் இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாக்க வேண்டியும் இந்த கொடியநோய் மனிதர்களை விட்டு விலக வேண்டியும்   கடந்த ஐந்தாம் திகதி அவர் யாத்திரையினை   தொடங்கியுள்ளார்.

யாழில் நயினாதீவு அம்மன் செல்லக்கதிர்காமம், ஆஞ்சனேயர் கோவில்,தெல்லிப்பளை துர்கைஅம்மன், நகுலோஸ்வரம், அங்கிருந்து செல்வச்சன்நிதி,வல்லிபுரம் ஆழ்வார், சுட்டிபுரம் அம்மன் கோவில், பரந்தன் சிவன்கோவில், முல்லைத்தீவு மூங்கிலாறு சிவன் ஆலயம், வற்றாப்பளை அம்மன், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், தண்ணீரூற்று பிள்ளையார் கோவில் ஊடாக முல்லைத்தீவு திருகோணமலை வீதி ஊடாக அவர் கோணேஸ்வரம் செல்லவுள்ளார்.

   அதன்படி இன்று முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை நோக்கி பயணம் மேற்கொண்ட போது, உலகம் பூராக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய் அற்றுப்போகவேண்டும் என்பதற்காக யாத்திரையினை மேற்கொள்கின்றேன் என்றும் அவர் ஊடகங்களுக்கு  தெரிவித்தார்.


No comments