Header Ads

test

மட்டக்களப்பில் 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று.

 கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

கூடுதலாக அக்கரைப்பற்றில் 15 பேரும், பொத்துவிலில் 13 பேரும், சம்மாந்துறையில் 11 பேரும் ஏனைய பிரதேசங்களில் 10க்கும் குறைந்த கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்துக்கான இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 1 இலட்சத்து 50 ஆயிரம் சினோர்ஃபாம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன எனவும், அவற்றை சகல 13 சுகாதாரப் பிரிவுகளிலும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை ஏற்றி கொள்ளுமாரும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


No comments