Header Ads

test

கொழும்பு டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு(DNA) குறித்த பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார் .

 கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.


சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சடலம் யாருடைய எனக் கண்டறிந்த போதிலும் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தமையினால், மீட்கப்பட்ட அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெற்றப்பட்டு  பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர்டீ.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்னவினால் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை அறிக்கைக்கு அமைய தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் அப்பெண்ணின் மாதிரிகளுடன் ஒத்துபோகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

No comments