Header Ads

test

கொழும்பில் தலையில்லா விவகாரம்:காவல்துறை அதிகாரி பின்னணி!



தலையில்லா முண்டமாக பெண்ணின் சடலத்தை கைவிட்டு சென்றிருந்த இலங்கை காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின.


அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.


எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


மேலும் சந்தேகநபர் புத்தல பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் ஒரு துணை பொலிஸ் அதிகாரியாவார். மேலும் படல்கும்புர பகுதியில் வசிப்பவர் என்பது தெரிய வந்துள்ளது.


அதன்படி, சந்தேக நபரை கைது செய்ய மொனராகலை சிறப்பு பொலிஸ் குழு விசாரணைகளைத் தொடங்கியது.

இந்நிலையில் தான் அடையாளம் காணப்பட்;டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரி கைதிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments