Header Ads

test

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் கொழும்பின் ஆங்கில ஊடக ஊடகவியலாளர்களை இரணைதீவிற்குள் நுழைய கடற்படையினர் தடை.

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் கொழும்பின் ஆங்கில ஊடக ஊடகவியலாளர்களை இரணைதீவிற்குள் நுழைய கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவில் புதைக்க அரசாங்கம் முயன்று வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய இன்று காலை குறித்த குழுவினர் இரணைமாதா நகரை சென்றடைந்தனர்.

எனினும் அங்கிருந்து இரணைதீவிற்கு நுழைய கடற்படையினர் அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் முறையிட்ட போது, அது பற்றி தனக்கு தெரியாது என்றும் ஆராய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர், தான் கூட்டம் ஒன்றில் இருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அப்பகுதி மக்களை மட்டுமே அங்கு செல்ல அனுமதிப்போம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



No comments