Header Ads

test

இலங்கையில் தற்போது புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் தற்போது புற்றுநோய்  வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பதிவுகளின்படி, 64 புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், புற்றுநோயால் ஒவ்வொரு நாளும் 38 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையை செயல்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது, என்றார்.

ஒரு வருடத்திற்குள் மொத்தம் 30,000 புற்றுநோய் அடையாம் காணப்படுகின்றார்கள் எனினும் அவர்களில் 1,600 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நாட்டில் மக்கள் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வது குறைவு.

ஒரு புற்றுநோய் நோயாளிக்கு இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய அரசு ரூ .45,000 செலவிடுகிறது. இந்த மருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்டால், அதற்கு ஒரு நோயாளிக்கு ரூ. 14,000 ரூபாய் மட்டுமே செலவாகும்.

எனவே செலவை குறைக்கவும் அவற்றை இறக்குமதி செய்யும் போது ஏற்படும் செயல்திறனை பாதுகாக்கவும் கதிரியக்க மருந்து மையத்தை நாட்டில் நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.



No comments