Header Ads

test

நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான “ டிஜிட்டல் தளத்தை ” உருவாக்குவதற்காக இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இன்று முதல் அடுத்து வரும் 03 மாதங்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் மக்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை “ டிஜிட்டல் தளத்துக்கு ” அனுப்ப முடியும்.

முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி , தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு.

பேண்தகு கல்விக் கொள்கை ஒன்றுக்காக மிகவும் பரந்தளவில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு “டிஜிட்டல் தளம் ” திறக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கு பிரவேசிப்பதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவது மறுசீரமைப்பின் மற்றொரு நோக்கமாகும்.

பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் மறுசீரமைப்பின் மூலம் தொழில் திறன் விருத்தி, தொழிலில் ஈடுபடும்போது தமது கல்வித் தகைமைகளை விருத்தி செய்துகொள்வதற்காக திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையான மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இலங்கையின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் முன்பள்ளி முதல் முழுமையான கல்வியை வழங்குவது தமது எதிர்பார்ப்பாகும்.

இணையம் மற்றும் தொழிநுட்ப குறைபாடுகள் 2023 வருடமாகும்போது முழுமையாக நீக்கப்படும்.

கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தேசத்துக்காக அதனை விடவும் கீர்த்திமிக்க எதிர்காலத்தை கட்டயெழுப்புவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


No comments