Header Ads

test

தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு.

 தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் 28 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை 320 விவசாய சேவைகள் மத்திய நிலையங்களில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனைத்து தரிசு நிலங்களும் சுத்தம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25000 வீதம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும்

இதற்கான உரங்கள், தொழில்நுட்பம் மற்றும் இயந்திர வசதிகளை அரசாங்கம் இலவசமாக வழங்கவுள்ளதுடன், ஒவ்வொரு விவசாய சேவைகள் பிரிவிற்கும் 10 ஏக்கர் தரிசு நிலங்கள் பயிரிடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



No comments