Header Ads

test

வடக்கில் கொரோனாவின் கோரம்.

 வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 255 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் நேற்று உடுவிலில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

மேலும் மூன்று பேர் இ.போ.சவின் காரைநகர் சாலை நடத்துனர் ஒருவருக்கு நேற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடைய உறவினர்கள்.

மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ளவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 450 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 18 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் 16 பேருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தையில் கண்டறியப்பட்டுள்ளனர்.




மன்னார் மீன் சந்தை தொழிலாளி ஒருவர் தொடருந்துடன் மோதி உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனால் மன்னார் மீன் சந்தையில் இன்று எழுமாற்றாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments