Header Ads

test

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞனுக்கு நீதி மன்றம் வழங்கிய அதிரடித்தீர்ப்பு.

 அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்தில் பண மோசடி செய்துவந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு பிரிஸ்பன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு பத்தரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில், இலங்கைப் பின்னணியைக் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் 6 மாத காலத்தில் சுமார் 40 ஆயிரம் டொலர்கள் வரை மோசடி புரிந்துள்ளதாகவும்,

இப்பணத்தை அவரது மனைவியின் IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சைக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவர் மாணவர் விசாவில் இருந்துகொண்டு வேலைவாய்ப்புக்காக தேடியலையும் மாணவர்களை வலைவீசிப்பிடித்து அவர்களிடம் பண மோசடி செய்யவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரிஸ்பன் மாஜிஸ்ரேட் நீதிமன்றில் இடம்பெற்ற இவ்வழக்கின் முடிவில், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாகவும், இது 3 மாதங்களில் இடைநிறுத்தப்படுகின்ற போதும் இரு வருடங்களும் அவர் நன்னடத்தையை பேணவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த இவருக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்ததாக - குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments