Header Ads

test

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 கொழும்பின் பல்வேறு பகுதிகளில் போலியான நிறுவனமொன்றை நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று (30) பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகண தெரிவித்தார்.

சந்தேக நபர் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் குறித்த சந்தேக நபர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கைதான சந்தேக நபர் 29 வயதான அடுலுகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் இன்று (31) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


No comments