Header Ads

test

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை.

 நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்களில் கடந்த முதலாம் திகதி முதல் இடம்பெற்று வந்த கல்வி பொதுதாரதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றது.


பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் குழுக்களாக ஒன்று கூடாது தங்களது வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு பாதிப்பினை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறான குழப்பங்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாட்டின் சகல காவல்நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படவுள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்களை கருத்திற்கொண்டு மாணவர்கள் செயற்படுவது கட்டாயமாகும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு முறை பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுதராதர பரீட்சையானது சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இடம்பெற்றிருந்தது.

இம்முறை கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments