Header Ads

test

பிரதமரை சந்தித்த பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஸல் முஜஹிட்.

 பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஸல் முஜஹிட் அன்வர்கானுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இலங்கை விமானப்படையின் 70 வது நிறைவு கொண்டாட்டங்களுக்காக அவர் நாட்டிற்;கு வருகைத்தந்துள்ள நிலையில், குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இலங்கைக்கான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தயாராகவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகுத்துள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

லாஹுர் நகரில் இடம்பெற்ற வர்த்தக மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தரம்வாய்ந்த இலங்கை உற்பத்தியான தேயிலையை கொள்வனவு செய்யுமாறும் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த மாநாட்டின் போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments