Header Ads

test

33 வயதான இலங்கை பெண்ணொருவர் ஜப்பானில் உயிரிழந்தமைக்கும் அவர் உணவு உண்ணாமல் இருந்தமையே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 ஜப்பானில் நகோயா நகரிலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த 33 வயதான இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்தமைக்கும் அவர் உணவு உண்ணாமல் இருந்தமையே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சுமார் 7 மாதகாலமாக முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த பெண் கடந்த 6 ஆம் திகதி மேற்படி பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் உணவு உண்பதை தவிர்த்து வந்துள்ள நிலையில், தன்னை விடுவிக்குமாறு குடிவரவு அதிகாரிகளிடம் இப்பெண்ணை கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளதால் இப்பெண் உயிரிழப்பதற்கு முன்னதாக எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான விசாவின் மூலம் ஜப்பானுக்கு சென்ற இப்பெண், விசா காலாவதியான பின்னரும் அந்நாட்டில் தங்கியிருந்தமைக்காக கடந்த வருடம் ஆகஸ்டில் கைது செய்யபட்டிருந்தார்.

இதனையடுத்து, குடிவரவு முகாம் ஒன்றுக்கு அனுப்பப்பட்ட தனக்கு எவ்வித வசதிகளும் கிடைக்கவில்லை என்று அவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அதனால் தனது உடல் நலிவுற்றதால் இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் அமைச்சரவையில் இந்தவிடயம் தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் இப்பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜப்பானின் நீதியமைச்சர் கமிகாவா யோகோ உத்தரவிட்டுள்ளார்.

இந்த இலங்கைப் பெண் தனக்கு உதவிகோரி எழுதிய சித்திரங்களுடனான குறிப்பு ஒன்றை அசாஹி ஷிம்புன் என்ற ஜப்பான் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அவ்வாறான குறிப்பு ஒன்றில், தற்போது தனக்கான முதன்மை தேவையாக இருப்பது உணவு மாத்திரமே என தெரிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்தும் அவரது உடல்நிலை மோசமடைந்தமையினால் கடந்த 6ஆம் திகதி அவர் முகாமின் உள்ளேயே உயிரிழ்ந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


No comments