Header Ads

test

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை.

 கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் குடும்பங்களுக்கே இவ்வாறு உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது 127 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அவர்களில் 51 பேர் திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதனை அடுத்து குறித்த கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

அதோடு குறித்த பகுதிக்கு வெளியில் இருந்து உள்நுழையவும் , வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்குள் 1100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அதில் அநேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையில் தொழில் புரிபவர்கள் என்பதுடன் , தினசரி கூலி தொழிலாளிகளும் உள்ளடங்குவதனால் , அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறவுகள் முன் வர வேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments