Header Ads

test

காரைநகர் போக்குவரத்து கழக பேருந்து (CTB) நடத்துனரின் அராஜகம்.!!!

காரைநகர் போக்குவரத்து கழக பேருந்து (CTB) நடத்துனரின் அராஜகம்.!!!

இன்று (10) காரை நகர் வவுனியா சாலைக்கான போக்குவரத்து கழக பேருந்து (CTB) நடத்துனரின் அசிங்கத்தனமான செயற்பாட்டால் குறித்த பேருந்தில் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -

இன்று நண்பகல் வேளை கிளிநொச்சியிலிருந்து, மாங்குளம் பனிக்கன்குளம் செல்ல முற்பட்ட கணவன் மனைவியான வயோதிபர்களை, குறித்த பேருந்தில் பயணிக்க முடியாதென அதிகாரத் தொனியிலும் பல கெட்ட வார்த்தை பிரயோகங்களையும் பிரயோகித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட முதியவர் மேலும் கூறுகையில்

இச் சம்பவமானது இலங்கை போக்குவரத்து கழகத்தின் நற் பெயருக்கு கழங்கம் விளைவிக்கின்ற செயற்பாடாக அமைகின்றது.

கிளிநொச்சி தண்ணீர் தாங்கியடியில்,  தான் குறித்த பேருந்தில் ஏறியதாகவும், தனது மனைவி கிளி பேருந்து நிலைய சந்தியில் அதே பேருந்தில் மாங்குளம் பனிக்கன்குளம் செல்வதற்கு ஏற முற்பட்டபோது, மனைவியை ஏறவிடாது தடுத்து நிறுத்தி இப் பேருந்தில் பயணிக்க முடியாதெனவும் கூறியுள்ளார்.

பின்பு ஒருவாறாக ஏறி, பயணிக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நடத்துனர் மிகவும் அநாகரிகமான முறையில் செயற்பட்டு,  தாக்க முற்பட்டதோடு மட்டுமல்லாது கெட்ட வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் பேருந்திலிருந்து இறக்க முற்பட்டதாகவும், மீறி கதைக்க முற்பட்டால் தாக்குவேனெனவும் இதைப்போன்று பலருக்கு பல முறை செய்துள்ளதாகவும் வீர பிரதாபம் காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டையுடைய நடத்துனர்களினால் அரச பேருந்துக்களில் வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடுகிறது.

இதைப்போன்றே தினசரி பல நிகழ்வுகளை அவதானிக்க முடிகிறது.

சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் குறித்த நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறும் பட்சத்தில் மேலதிக கவனத்திற்க்காக குறித்த அமைச்சின் செயலாளருக்கு தகவல் வழங்கப்படுமெனவும் மனவருத்தத்துடன் அறியதருகின்றோம்.

இதைப்போன்றே கடந்த வாரம் வவுனியா யாழ்ப்பாண சாலைக்கான தனியார் பேருந்தும் இவ்வாறானதொரு செயற்பாட்டை அரங்கேற்றியுள்ளது.

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றியதனால், பேருந்தின் சாரதி பயணி ஒருவருடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருக்க சம்மந்தப்பட்டவர்காள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.





No comments