Header Ads

test

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.!!!

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்  -  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.!!!

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் பா.உ. சாள்ஸ் நிர்மலநாதன்  ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து வந்த பௌத்த துறவி உயிரிழந்த பின்பு அவரது உடலைக் கோவில் வளாகத்தில் அடக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடலைத் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதிலிருந்து ஒன்று மட்டும் புலப்படுகின்றது சட்டம் தமிழர்களுக்கு ஒன்று பௌத்த மதகுருக்களுக்கு ஒன்று.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.

சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் நம்பிக்கை வைத்துள்ளன.

ஆனால் இன்றைய நிகழ்வுகள் ஒருபோதும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

கடந்த கால எமது ஆயுத போராட்டங்களும் இப்படிப்பட்ட பாதிப்புக்களினாலே ஏற்பட்டன என்பதை ஏன் பேரினவாதம் உணர்ந்து கொள்ளவில்லை.

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

சட்டம் அனைவருக்கும் ஒன்று என்பதை இந்த நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments