Header Ads

test

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேச்சு நடாத்த தயார் - எம்.ஏ.சுமந்திரன்.!!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேச்சு நடாத்த  தயார் - எம்.ஏ.சுமந்திரன்.!!!

வடமராட்சி, கெருடாவில் நற்பணி மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

இம்முறை இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ  ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும், கோட்டாபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பிலும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பிலும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளார்கள்.

குறித்த பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுடனும் அந்தக் கட்சிகளின் தலைமைகளுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாகப் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றது. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டறியவுள்ளோம்.

இப் பேச்சுக்கள் மற்றும் சந்திப்புக்களின் பிரகாரம் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் எடுக்கவுள்ளோம். அவசரப்பட்டு தீர்மானம் எதையும் எடுக்கமாட்டோம். அதேவேளை, எவரும் எதிர்பாராத தீர்மானத்தையும் நாம் எடுக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

கெருடாவில் நற்பணி மன்ற மண்டபத்தில் நற்பணி மன்றத் தலைவர் வெ.பிறேமதாசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments