Header Ads

test

முல்லைத்தீவு கொக்குளாய் பிரதேச சட்டவிரோத மீன்பிடிக்கு முல்லை மாவட்ட நீதிவான் நீதி மன்றம் கடுமையான எச்சரிக்கை.!!!

முல்லைத்தீவு கொக்குளாய் பிரதேச சட்டவிரோத மீன்பிடிக்கு முல்லை  மாவட்ட நீதிவான் நீதி மன்றம்  கடுமையான எச்சரிக்கை.!!! 

முல்லைத்தீவு கொக்கிளாய் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நீண்ட காலமாக மீன்கள் பிடிக்கப்பட்டு வருவதனால் கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவதாக அனைவராலும் குற்றம் சாற்றப்பட்டு வருகின்றன.

குறித்த திணைக்களத்தின் அசமந்தப் போக்கினால் முல்லை மாவட்டத்தின் கடல் வளங்கள் நாளுக்கு நாளாக அழிக்கப்பட்டுவருவது முறைகேடானதொன்றாகும்.

இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதி மன்றத்தால் (18) இன்று  இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஒரு வார தவணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனடியாக இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களம்  கவனமெடுத்து குறித்த பிரதேசத்தின் வளத்தை பாதுகாக்க வேண்டுமென்பதே  அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது -

வரவிருக்கின்ற பருவகாலத்தில் இறால் விளைச்சல்  அதிகரித்து காணப்படும் நிலையில், கொக்குளாய் பகுதி மீனவர்களுக்கு சட்ட ரீதியான முறையில் இறால் பிடிப்பதற்க்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

அதாவது பூர்வீகமாக இப் பிரதேசத்தில் வாழும் மீனவ சமூகத்தினர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இறால் பிடிப்பதற்கான பருவ காலத்தில், வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள், குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டுவருவதும் வழமையாகியுள்ளது.

யுத்தத்தினால் பல தடைவைகள் இடப்பெயர்வுக்குள்ளாகி பாரிய சொத்தளிவுகளைச் சந்தித்தது மட்டுமல்லாமல் இறுதி கட்ட யுத்தத்தால் உயிர்,உடல் அவயங்கள் மற்றும் முழுமையான சொத்தளிவுகளை சந்தித்த மக்களே பாரிய போராட்டத்தின் மத்தியில் உயிருக்கு உத்தரவாதமற்ற கடற்றொழில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ் விடயங்களை கருத்தில்கொண்டு,
சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் கொக்குளாய் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்திலெடுத்து,  இவ்வாறான சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதுடன் கொக்கிளாய் மீனவர்களின் பருவகால இறால் பிடிக்கு முன்னுரிமை வழங்குவதும்  குறித்த திணைக்கள அதிகாரிகளின் கடமையாகும்.

இவ் விடயத்தில் கவனம் செலுத்த தவறும் பட்சத்தில், கொக்குளாய் கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து, அவர்களின் அன்றாட வாழ்வியல் செயற்பாடுகள் சீர் குலைவதற்கு முழுமையான பொறுப்பும் குறித்த திணைக்களத்தினரையே சாரும் என்பதே நிதர்சனமாகும்.   

No comments