Header Ads

test

ஐந்து அம்சக்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாதவிடத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் - தமிழர் மரபுரிமைப் பேரவை வலியுறுத்து.!!!

ஐந்து அம்சக்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாதவிடத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் -  தமிழர் மரபுரிமைப் பேரவை வலியுறுத்து.!!!

வட மாகாணத்தில் திட்டமிட்டு முன்னெடுத்து வரும்  சிங்களமயமாக்களை உடன் நிறுத்தப்படவேண்டும்  உள்ளிட்ட 5 கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கப்படவேண்டும். அவற்றுக்கு செவிசாய்க்க அரசு தவறும் பட்சத்தில் அரசுக்கான ஆதரவு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்யவேண்டுமென
தமிழர் மரபுரிமைப் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தி உள்ளது.

இன்று (29) முல்லைத்தீவிற்கு வருகை தந்திருந்த  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் தமிழர் மரபுரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -

முல்லைத்தீவு, கோவிற்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில், நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தமிழ் மக்களினுடைய சமகால நிலமைகள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் இறுதியில் தமிழ் மக்களின் சமகால அரசியல் நிலமை மற்றும் இன்னோரென்ன விடயங்கள் தொடர்பில்  ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழர் மரபுரிமைப் பேரவையினரால் கையளிக்கப்பட்டது.

குறித்த ஐந்து கோரிக்கைகளையும், அரசு ஏற்கத் தவறும் பட்சத்தில், கூட்டமைப்பு அரசிற்கு வழங்கும் ஆதரவினை மீள் பரிசீலணை செய்யவேண்டும் எனவும் தமிழர் மரபுரிமைப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இச் சந்திப்பின் போது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சட்டரீதியான உதவியைக் கோருவதாக அமையவில்லை, மாறாக அரச அனுசரணையுடன் மத்திய அரச நிர்வாகக் கட்டமைப்புக்களால், வட, கிழக்கு பகுதிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில், அவசர மற்றும் நியாய பூர்வமான கேரிக்கைகளை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் என்று தமிழர் மரபுரிமைப் பேரவையினர் குறிப்பிட்டனர்.

கீழ் காணப்படும் கோரிக்கைகள்
மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும். இவ்வாலயதினைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து விகாரை அமைப்பதை உடன் நிறுத்த, காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்கவேண்டும்.

வடமாகாணத்தில் தொல்லியல் பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளிப்படுத்தப்பட்ட இடங்களை நம்பகத்தன்மையான தமிழ் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிர்வாக மற்றும் கிராம மட்ட மக்களின் பங்குபற்றுதலுடனான கூட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் வரை வர்த்தமானி குறிப்பிடப்பட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களைவிட மாற்றங்கள், திரிபுபடுத்தல்கள், புதிய கட்டுமானங்கள், மேற்கொள்ளப்படாது பேணப்படல் வேண்டும்.என்பதை வலியுறுத்தி வர்த்தமானி ஒன்றினை உடன் வெளியிட கலாச்சார அமைச்சிடமிருந்து எழுத்து மூலம் வாக்குறுதி பெற வேண்டும்.

வடமாகாணத்தில் மகாவலி “எல்” அபிவிருத்தி வலயம் மூலம் ஏற்படுத்தப்பட்ட, திடடமிட்ட சிங்களமயமாக்கல்கள், தற்போது தொடர்ந்து இடம்பெறுவதனால், குறைந்த பட்சம் 2007ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மீறப்படுவதுடன் 1988ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல், எல்லைக் கிராமத் தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.

எதிர்வரும் நாள்களில் மகாவலி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு மாகாணத் திணைக்களங்களினூடாக மேற்கொள்ளப்படவேண்டும்.

ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 2009ன் பின்னர் வர்த்தமானியில் வெளியீடு செய்யப்பட்ட, ஒதுக்கக் காடுகள் தொடர்பான எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால், 2009ஆம் ஆண்டின் பின் வர்த்தமானியில் வெளியீடு செய்யப்பட்ட தேசியப் பூங்கா, இயற்கை ஒதுக்க இடங்களை மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையது, ஆகையால் இவற்றுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.
-
என்பதுடன், மக்கள்குடியிருப்புகள், கலாச்சாரம், வாழ்வாதாரம் என்பவை பாதிக்கப்படாவண்ணம் வர்த்தமானி ஒன்று உடன் வெளியிடப்படல் வேண்டும்.

இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலணை செய்யவேண்டுமெனவும், வழங்கப்பட்ட மனுவில் வலியுறுத்தியுள்ளோம் என தமிழர் மரபுரிமைப் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

No comments