Header Ads

test

16.09.2019 இன்றைய நாள் எப்படி.!!!

16.09.2019 இன்றைய நாள் எப்படி.!!!

மேஷம்:
செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் மகிழ்ச்சி யாகக் காணப்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்க ளின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வரவை விட செலவுகளே அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக் கூடும்.

ரிஷபம்:
அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:
வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். சிலருக்கு திடீர் பயணம் மேற் கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.


கடகம்:
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு உறவினர்கள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்மம்:
மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் ஆலோசனைப்படி செயல்படுவது நன்மை தரும். இன்று கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.


கன்னி:
புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேற்றுமை நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாக மும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.


துலாம்:
மனதில் தைரியம் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சி எடுப்பதற்கு உகந்த நாள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் உங்களை விமர்சித்த சக ஊழியர்கள் மன்னிப்பு கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.


விருச்சிகம்:
இன்று எதிலும் பொறுமை அவசியம். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தள்ளிப் போகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.


தனுசு:
இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வெளியூரிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக் கக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.


மகரம்:
உற்சாகமான நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.


கும்பம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தேவையான பணம் கையில் இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண் டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.


மீனம்:
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

No comments