Header Ads

test

மலையகத்தில் கடும் மழையால் மக்கள் பாதிப்பு.!!!

மலையகத்தில் கடும் மழையால் மக்கள் பாதிப்பு.!!!



நுவரெலியா மற்றும் அட்டன், கொட்டகலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கொட்டகலை கிறிஸ்னஸ்பாம் தோட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 5 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலம் வெள்ள நீர் புகுந்துள்ளன.

இப்பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மேற்படி 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தோட்டத்திற்கான போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, அட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் மரம் முறிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி போய்யுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும்மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. அத்தோடு சில பிரதேச பிரதான வீதிகளில் ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு, பனிமூட்டமும் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


No comments