Header Ads

test

கையால் ஆகாத இந்த பணப் பெட்டி அரசியல்வாதிகளால் எமது மக்கள் கைலாசம் கூட போக இயலாத நிலை ஏற்பட்டிருக்கின்றது - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.!!!

கையால் ஆகாத இந்த பணப் பெட்டி அரசியல்வாதிகளால் எமது மக்கள் கைலாசம் கூட போக இயலாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.....டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.!!!

தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளாததற்காக தான் வருத்தப்படுவதாக அண்மையிலே யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் தெரிவித்திருந்ததாக ஊடகங்களிலே செய்திகள் வெளிவந்திருந்தன.

இன்று தமிழ் மொழியே தெரியாதவர்கள் வடக்கு மாகாணத்திலே மின் மானி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இத்தகைய ஏற்பாடுகள் காரணமாக எமது மக்களும், இத்தகைய பணியாளர்களும் பல்வேறு இடையூறுகளையே நாளாந்தம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது –எங்கே போகிறீர்கள்? எனக் கேட்டால், கூடையிலே தேங்காய்! என்று பதில் சொல்லுகின்ற நிலை இன்று தோன்றியிருக்கின்றது.

வடக்கு மாகாணத்திலே தொழில்வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்கள் இல்லாமல் இல்லை. தொழில்வாய்ப்புகளின்றி மிக அதிகமானோர் இருக்கின்ற நிலையிலேயே இத்தகைய பதவிகள் வடக்கு மாகாணம் தவிர்ந்தவர்களகை; கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன.

வடக்கிலே இருக்கின்ற தொழில்வாய்ப்புகளுக்கு அங்குள்ளவர்களை நியமிக்காமைக்கு, அந்தந்த தொழில்வாய்ப்புகளை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வராத காசுபெரலிய தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளே காரணமாக இருந்தாலும், அமைச்சுப் பொறுப்புகளில் இருக்கின்றவர்களாவது எமது மக்கள் தொடர்பிலும் சற்று அக்கறை எடுத்து, எமது மக்களுக்கும் போதிய தொழில்வாய்ப்புகளை கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்ற விடயத்தையே இங்கு மீண்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்

கையால் ஆகாத இந்த பணப் பெட்டி அரசியல்வாதிகளால் எமது மக்கள் கைலாசம் கூட போக இயலாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.



No comments