Header Ads

test

யார் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தண்டனைக் கிடைக்காது என்பது மட்டும் உறுதி என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.!!!

யார் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தண்டனைக் கிடைக்காது என்பது மட்டும் உறுதி என 
ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.!!!



நாட்டில் யார் ஜனாதிபதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றாலும், திருடர்களுக்கு ஒருபோதும் தண்டனை கிடைக்காது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மேலும், தேரர்கள் குறித்து தான் வெளியிட்ட கருத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப்பேச்சாளரே திரிபுப்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
நான் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக கூறியிருந்தேன். பெரும்பான்மையான தேரர்களை நான் குறை கூறவில்லை. மிகவும் சிலர் தொடர்பிலேயே நான் அவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருந்தேன்.
இனி அவ்வாறான தேரர்களுடன் நான் எவ்விதப் பிரச்சினைகளையும் செய்து கொள்ளப்போவதில்லை.
உண்மையில், நான் கூறியதை திரிபுப்படுத்தியே இவ்வாறான கருத்தொன்று பரப்பப்பட்டுள்ளது. மகா சங்கத் தேரர்களை கொச்சைப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நான் கூறவில்லை.  இதுகுறித்து நான் மகாநாயக்க தேரர்களிடம் தெளிவுப்படுத்தினேன்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரினாலேயே இவ்வாறான கீழ்த்தரமான செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தேவையில்லாமல் தேரர்களின் கோபத்திற்கு நான் ஆளாகவேண்டியுள்ளது.
உண்மையில் இது அரசியல் பழிவாங்கலாகவே நான் கருதுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சி என்பது பாரியதொரு கட்சியாகும். எமக்கு ராஜபக்ஷக்கள் குறித்து என்றும் கவலையில்லை.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர். எனினும், ராஜபக்ஷக்களுக்கிடையில்தான் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் கவலையடையப்போவதில்லை.
எனினும், எவர் ஜனாதிபதியாக பதவியேற்றாலும் திருடர்களுக்கு மட்டும் தண்டனை கிடைக்காது என்பது மட்டும் உறுதியாக இருக்கிறது.
ஏனெனில், அனைவரும் பகைவர்களாக காண்பித்துக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் நண்பர்களாகவே பழகிக்கொண்டிருக்கின்றனர்.
இதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தண்டனைக் கிடைக்காது என்பது மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.



No comments