Header Ads

test

நகர சபையின் 16 வது மாதாந்த சபை அமர்வில் கெளரவ நகர சபை உறுப்பினர் ARM.லரீப் மூலம் உயரிய சபையில் முன்மொழியப்பட்ட விடயங்கள் .!!!

வவுனியா நகர சபையின் 16 வது மாதாந்த சபை அமர்வில்  கெளரவ நகர சபை உறுப்பினர் ARM.லரீப் மூலம் உயரிய சபையில் முன்மொழியப்பட்ட விடயங்கள்.


* எதிர்காலத்தில் அடுத்து வரும்போராட்டம்  நீருக்கான போராட்டம்தான் அதனை கவனத்தில் கொண்டு நகர சபைக்குட்பட்ட குளங்களை ஆளப்படுத்தி அழகுபடுத்துமாறும் அதனூடாக நீரினை சேமிக்க முடியும் அதனை கவனம் செலுத்துமாறும் வேண்டப்பட்டது.

* பிரதான வீதியில் நவீன தரத்திலான தெருவிளக்கு புனரமைப்புத் திட்டம்.

* வர்த்தக நிலையங்கள் பெயர் மாற்றம் விடயமான முன்மொழிவு.

* நீண்ட கால  பிரச்சனையான  அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தரமான இட ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தப் பட்டது .

*மாடு அறுக்கும் தொழுவத்தினை இடம் மாற்றி பொருத்தமான மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத ஒரு இடத்தினை தெரிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது .

* பல்துறை விளையாட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் நகர சபை மைதானத்தினை புணர்நிர்மானம் செய்யுமாறும் மைதானத்தை சுற்றியுள்ள .கழிவுநீர் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்துமாறும் மைதானத்தினை  வாடகைக்கு பெறுபவர்களுக்கு அதனுடைய ஒழுங்கு விதிமுறைகளை பேணுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டது .

* சபையின் மூலம் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை வெகுவிரைவில்  நடைமுறைப்படுத்துவதற்கு உப குழுக்களின் செயற்பாடுகளை
விரைவு படுத்துமாறும் வேண்டினார்

* வவுனியா நகர சபைக்குட்பட்ட பொது மயானங்கள்
( மையவாடி ) தூய்மைப்படுத்துமாறும் அதனை நடைமுறைப்படுத்துமாறும் வேண்டியுள்ளார்.



No comments